"நெருப்புடன் விளையாட வேண்டாம்"-மம்தா பானர்ஜியை எச்சரித்த ஆளுநர் ஜெகதீப் தங்கர்

0 4285
நெருப்புடன் விளையாட வேண்டாம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ஆளுநர் ஜெகதீப் தங்கர் எச்சரித்துள்ளார்.

நெருப்புடன் விளையாட வேண்டாம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ஆளுநர் ஜெகதீப் தங்கர் எச்சரித்துள்ளார்.

கொல்கத்தாவில் பாஜகவினர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜகவினருக்கு வேறு வேலையில்லை என்றும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அரசியல் ஆதாயம் அடையும்பொருட்டுத் தாக்குதல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் முதலமைச்சரின் பேச்சைத் தான் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவர் இவ்வாறு பேச மாட்டார் என்றும் ஆளுநர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நெருப்புடன் விளையாட வேண்டாம் என்றும் ஆளுநர் ஜெகதீப் தங்கர் எச்சரித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments